Monday, November 3, 2014

உலகநாயகன் அவர்களின் 60 ம் வருட பிறந்த நாள் - நவம்பர் 7, 2014

உலகநாயகன் "கமல்ஹாசன்" அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா, தமிழக மெங்கும் நவம்பர் 7, 2014 வெள்ளிகிழமையன்று உலகமெங்குமுள்ள ரசிகர் களால் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியத் திரையுலகில்  வாழும் சகாப்தமாக திகழும் கமல்ஹாசன் அவர்களுக்கு, இந்த வீடியோ காணொளியை சமர்ப்பணம் செய்கிறேன்...

video

இந்தியத் திரை உலகில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநராக, நடன இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, புதிய புதிய தொழில் நுட்பங்களை திரையில் முதலில் அறிமுகப்படுத்தும் நபராகவும் இருக்கிறார். இப்படியாக பல பரிணாமங்களில் இந்தியத் திரை உலகிற்கு தன்னுடைய மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்.

சினிமாத் துறையில் சம்பாதித்த பணத்தை, சினிமாத் துறையிலேதான் 
முதலீடு செய்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை வேறு தொழி லில் முதலீடு செய்ததில்லை. எண்ணற்ற வருடங்கள் சினிமாத் துறையில் சூதாடியுள்ளார். தன்னுடைய சிறு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து, சமீபத்திய விஸ்வரூபம் திரைக்காவியம் வரைக்கும், வெவ்வேறு பரிணாமங்களில் உடலை, உயிரை பணயம் வைத்து நடித்து சகாப்தம் படைத்துள்ளார். தீவிர புத்தக வாசிப்பாளராக இருப்பவர். சமீபத்திய நூல்கள் அத்தனையும் வாசித்து விடுவார். 

தன்னுடைய இளம் வயதில் 'மைய்யம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள் ளார். வரலாற்று நாவல்கள், வரலாற்று ஆவணங்களை தேடித் தேடி படிப்பதில் ஆர்வமுள்ளவர். கமல்ஹாசன் அவர்களை நான் வெறும் சினிமா நடிகராக பார்ப்பதில்லை. பலதுறையில் புலமை பெற்ற அறிவு ஜீவியாகவே பார்க்கி றேன். உலக சினிமாவை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப் -பார். தொலைக்காட்சி ஊடகங்களில் இவருடைய நேர்காணலிலே பார்க்க முடியும்.

என்னுடைய சிறு வயதில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் அவர்கள் நடித்த 'சத்யா' திரைப்படம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகான திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே சகாப்தம் படைத்தவைதான்.
சினிமாவின் பரிணாமத்தையே இந்த நூற்றாண்டில் மாற்றியமைத்தவர்.
இதற்கு உதாரணமாக 'நாயகன்' திரைப்படத்தை சொல்லலாம். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளார். கமலின் தீவிர ரசிகர்களும் 
தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 

எழுத்தாளர் மணா அவர்கள் சமீபத்தில் உலகநாயகன் அவர்களைப் பற்றி 
"கமல் நம் காலத்து நாயகன்" என்ற அற்புதமான தொகுப்பு நூலை கொண்டு வந்துள்ளார். கமல்ஹாசன் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
இந்தியத் திரை உலகில் இனிவரும் வருடங்களில் மேலும் பல அற்புதங்களை நிகழ்த்த உள்ளார். உலகநாயகன் அவர்களுக்கு 60 ம் வருட பிறந்த நாள் பொன்னான நாளாக அமைய, எளிய ரசிகனின் இதயப்பூர்வமான வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்..!
KamalHaasan.tumblr.com

No comments:

Post a Comment