Wednesday, December 3, 2014

முகநூல் பதிவு - 1

சமீப காலங்களாக தமிழ் திரைப்படங்களுக்கு தூய தமிழ் பெயர்கள் வைப்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாக உள்ளது. கோ, அரண்மனை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், அஞ்சான், இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா, யான் என்ற படங்களின் பெயர்கள், நல்லதொரு முயற்சியே.

சமீபத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள், நடிகர் ஆர்யாவை வைத்து எடுத்திருக்கும் படத்திற்கு "மீகாமன்" என்று பெயர் சூட்டியுள்ளார். வசந்த பாலன் அவர்களின் "காவியத் தலைவன்", ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் "கத்தி", பரத்பாலா அவர்களின் "மரியான்" போன்ற பெயர்கள் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தன. இது போன்ற நடைமுறைகள் தொடர வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment