Wednesday, December 17, 2014

நினைவுகள் - 18

கல்லூரியில முதல் வருஷம் படிச்சிகிட்டு இருக்கும்போது நவம்பர் 7,1999 ம் வருஷம், இயக்குனர் சங்கரோட முதல்வன் படம் ரிலீஸ் ஆகுது. 'ஆக்சன் கிங்'
அர்ஜுன் நடிச்சிருந்ததால, படத்து மேல பெரிய எதிர்பார்ப்பு. அந்த சமயத்துல இணையதளங்கள் ஓரளவு பிரபலமா இருந்துச்சு. சமூக வலைதளங்கள் கண்டுபிடிக்கப்படலை. கோவில்பட்டியில சண்முகா திரையரங்குல "முதல்வன்" படம் ரிலீஸ் ஆனது. படம் வெளிவந்து ரெண்டு நாள்ல பரபரப்பா பேசுனாங்க.

கல்லூரி விடுதியில இரவு நேரத்துல 8 மணிக்குள்ள வந்துறணும்.
இல்லேன்னா, விடுமுறை விடுப்பு எடுத்ததுக்குண்டான கடிதம் கொடுத்துருக் கணும். பெரிய கட்டுப்பாடெல்லாம் கிடையாது. சனிக்கிழமை கல்லூரி விடுமுறைங்கிறதால மூன்றாம் ஆண்டு சீனியர் மாணவர்கள் உதயசூரியன், கிருஷ்ணபிரகாஷ், செந்தில்குமார் மூணு பேரும் முதல்வன் படம் பாக்கப் போறேன்னு பேசிகிட்டு இருந்தாங்க. நானும் வர்றேன்னு சொன்னேன்.

மத்தியானம் 2 மணிபோல கிளம்புனோம். மாலை 6 மணி காட்சி பாக்குறதுக்கு போனோம். மத்தியானம் காட்சி முடிஞ்சி ரசிகர்கள் வெளிவந்தப்ப பாத்தா, SRNM கல்லூரி மாணவர்கள் நிறைய பேரு இருந்தாங்க. என்னோட கணிப் பொறித்துறை சீனியர் மாணவர்களும் இருந்தாங்க.


கிருஷ்ணபிரகாஷ் அண்ணன் படம் எப்படி இருக்குதுன்னு கேட்டப்ப, பட்டையைக் கிளப்புதுன்னு கமெண்ட் சொன்னாங்க. அந்த சமயத்துல "முதல்வன்" படம் பிரமாண்டமாவே இருந்தது. அரசியல் களத்தை புதிய கோணத்துல இதுவரைக்கும் யாரும் இப்படி எடுத்ததில்லை. "ஒரு நாள் முதல்வன்" என்ற கதைக்களமே இளைஞர்கள்கிட்ட கிளர்ச்சியை ஏற்படுத்திச்சி. அந்த வயசுல அரசியலைப் பத்தின ஒரு புதிய பார்வையை உண்டாக்கிச்சி. சமூகத்துல தீய சக்திகளை எதிர்த்து போராடுற கதாப்பாத்திரங் களை, இடைவிடாம இயக்குநர் சங்கர் திரை உலகுக்கு இன்னைக்கு வரைக்கும் கொடுத்துகிட்டே வர்றாரு.


படத்தோட காட்சி முடிஞ்சி, திரையரங்கைவிட்டு வெளிய வந்து கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்துல இருக்குற உணவகத்துல இரவு உணவை சாப்பிட்டோம்.
இரவு 10 மணிக்கு சாத்தூருக்குப் போற பேருந்து ஏறி, சடையம்பட்டி பேருந்து நிறுத்தத்துல இறங்கி நடந்து வந்து, சத்தமில்லாம கல்லூரி விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

நானு சீனியர் மாணவர்களோட சேந்துகிட்டு சினிமாவுக்குப் போன விஷய- த்தை, விடுதிக் காப்பாளரா இருந்த செந்தில்குமரன் சாருகிட்ட யாரோ சொல் லிட்டாங்க. காலை வேளையில கூப்புட்டு சத்தம் போட்டாரு. கணிப்பொறித் துறையில முதல் வருஷம் நல்ல மதிப்பெண்கள் எடுக்குறவரைக்கும், சினிமா பாக்குற சமாச்சாரங்களை குறைச்சிக்கிடணுமுன்னு சொன்னாரு. அனுமதி வாங்காம விடுதியைவிட்டு இனிமே போகக்கூடாதுன்னு சொன்னாரு.

சரி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு? அரை மணி நேரம் படத்தோட கதையைச் சொன்னேன். செந்தில்குமரன் சாருக்கு கதை ரொம்ப பிடிச்சிருந்ததால, அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சியை பாக்கப் போறேன்னு சொன்னாரு. படம் பாத்துட்டு ரொம்ப பிரமாண்டமா இருந்ததா சொன்னாரு.

ஏதாவது ஒரு பாடத்துல Topic நல்லா படிச்சிட்டு, உன்னோட வகுப்புல செமி னார் எடுப்பா. ஒரே நாள்ல கணிப்பொறித் துறையில பிரபலமாயிருவே ன்னு கிண்டலா சாரு பேசுனாரு. எனக்கென்னமோ சார், மேடைப் பேச்சுல நல்லா பேசக்கூடிய பேச்சாளரா வரணுமுன்னு ஆசை இருக்குது. அதுக்கு நிறைய படிக்கணுமுன்னு நினைக்கும்போதுதான் தலையே சுத்துற மாதிரி இருக்குது ன்னு சொன்னேன். இன்னைக்கு நினைச்சுப் பாத்தா, 04.04.14 அன்னைக்கு கணிப்பொறித் துறையோட சில்வர் ஜூபிலி விழாவுல பேசுனதை நினைச்சி தலையே சுத்துது. செந்தில்குமரன் சாரு பேசுனதை பாராட்டுனாரு. வாழ்க்கை யில நாம ஒரு விஷயத்தை செய்யணுமுன்னு ஆணித்தரமா நினைச்சாலே, ஏதோ ஒரு காலகட்டத்துல நிச்சயமா நடக்குமுன்னு தெரிஞ்சிகிட்டேன்!

No comments:

Post a Comment