Saturday, September 12, 2015

இத்தாலி வெனிஷ் திரைப்பட விழா - 11.09.15

இத்தாலி நாட்டில் நடைபெறும் வெனிஷ் திரைப்பட விழாவில் அண்ணன் ஆட்டோ சந்திரன் அவர்கள் கலந்து கொண்ட வேளையில்.. திரைப்பட விழா மேடையில் நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் அட்டகத்தி தினேஷ் உடன் அண்ணன் சந்திரன் அவர்கள்.. 'விசாரணை' திரைப்படம் குறித்து வெற்றிமாறன் அவர்கள் விழாவில் பேசும் வீடியோ காணொளி ஆட்டோ சந்திரன் அவர்களின் முகநூலில் பதிவாகியுள்ளது.. எனது ஆருயிர் அண்ணன் வெனிஷ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நிகழ்வு வாழ்வின் உன்னதமான தருணங்களாக பரிணமிக்கிறது. 'விசாரணை' திரைப்படம் சிறந்த மனித உரிமைகளுக்கான பிரிவில் 'சிறந்த மனித உரிமை திரைப்படம்' என்ற விருதை வென்று, உலக சரித்திரம் படைத்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் வெனிஷ் திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் விருதை வெல்வது, இதுவே முதல் முறை..!





No comments:

Post a Comment