Wednesday, September 23, 2015

கணிப்பொறித்துறையின் சில்வர் ஜுபிலி விழா (1988 - 2013) - 04.04.2014

கல்லூரி முதல்வர் விலங்கியல் துறைப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்...

கல்லூரியில் படிக்கும்போது மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். பேராசிரியர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் காலை வேளையில் விடுதியில் உணவருந்த வருவார். நானும் உணவருந்தி விட்டு இவருடைய காரிலேயே ஏறி கல்லூரியில் வந்து இறங்குவேன். வெள்ளியன்று மாலை வேளையில் என்னை காரில் அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு செல்வார். இல்லத்திற்கு சென்று விட்டு எனது ஊருக்கு செல்வேன். அடிக்கடி இந்த நிகழ்வு நடைபெறும். இந்த பசுமையான நினைவுகளை மீண்டும் பகிர்ந்துகொண்டேன். 2014 ம் ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியோடு கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து பணி ஒய்வு பெறுவதாக கூறினார்...


கணிப்பொறித்துறையின் சீனியர் மாணவர் (1991-1994) DR.பாலமுருகன் அவர்கள் முதல்வருடன்.. கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். எனது ஆருயிர் நண்பர் பாலமுருகன் அவர்களை மிகவும் வற்புறுத்தி இந்த விழாவிற்கு அழைத்து வந்தேன் என்பதைவிட, அவரே என்னை விழாவில் முன்னாள் மாணவரில் சார்பில் நான் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார்...


பேராசிரியர் சீனிவாசன் அவர்கள். கல்லூரியில் படிக்கும்போது வேதியியல் துறையில் பணியாற்றினார். தற்போது ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். விடுதிக் காப்பாளராக பணியாற்றிய போது நட்புடன் பழகிய நாட்கள் நெகிழ வைத்தது...






 DR.பாலமுருகன் அவர்களுடன்...













விழாவின் சிறப்பு விருந்தினர் APJ அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் v.பொன்ராஜ் அவர்கள், ஜெயவிலாஸ் குழுமத்தின் தலைவர் தினகரன் ஐயா அவர்களுடன் வருகை புரிந்த போது...











சிறப்பு விருந்தினர் அவர்கள் துறையின் புதிய கட்டிடம் மற்றும் கணிப்பொறி ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தபோது...



ஜெயவிலாஸ் நிறுவனத்தின் தலைவர் தினகரன் அவர்களும், பொன்ராஜ் அவர்களும் மரக்கன்றை நட்ட வேளையில்...




நாம் அனைவரும் மரம் வளர்ப்போம்..! மழை வளம் பெறுவோம்..!!


நாம் அனைவரும் உயிர் வாழ ஒரு மரம் நடுவோம்..!


www.yogutreeman.blogspot.com


சுற்றுச்சூழலுக்கு மகத்தான சேவை ஆற்றியதற்காக மத்திய அரசின் ஜனாதிபதி விருது (2008) பெற்ற எனது ஆருயிர் நண்பர் கோவை யோகநாதன் அவர்களுடன்...


video






விழா நடைபெற்ற அரங்கில் வருகை புரிந்திருந்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்...


என்றும் என் நினைவில் வாழும் துறைத்தலைவர் பேராசிரியர். Dr.கிருஷ்ணவேணி அவர்கள் குத்துவிளக்கேற்றுகிறார்...


கணிப்பொறித்துறையின் 25 வருட சாதனைகள் குறித்து வீடியோ காணொளி 10 நிமிடம் ஒளிபரப்பப்பட்டது... இந்த வீடியோ காணொளியை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் உருவாக்கியிருந்தார். கணிப்பொறித் துறையின் சாதனை பட்டியலில் இடம்பெற்ற புகைப்படங்களும், சாதனைகளும் மெய்சிலிர்க்க வைத்தது. அற்புதமான சாதனை விளக்க வீடியோ காணொளிகளை உருவாக்க துணைபுரிந்த பேரா.DR.அருணேஷ்  மற்றும் துறைத்தலைவர் DR.கிருஷ்ணவேணிஅவர்களுக்கு, இந்த வலைப்பூவின் மூலம் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...



பேராசிரியர்.கிருஷ்ணவேணி அவர்கள் தொடக்க உரை ஆற்றுகிறார்...


தினகரன் அவர்கள் உரையாற்றுகிறார்...

சில்வர் ஜுபிலி விழா நிதியாக கணிப்பொறித்துறை மாணவர்களின் சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் நிதியை அளித்த வேளையில்...



கணிப்பொறித்துறை ஆசிரியர்களின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை
தினகரன் ஐயா அவர்களிடம் அளித்த வேளையில்...



சில்வர் ஜுபிலி விழா மலரை வெளியிட்ட வேளையில்...






சிறப்பு விருந்தினர் Dr.பொன்ராஜ் அவர்கள் உரையாற்றிய வேளையில்...

DR.V.பொன்ராஜ் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றுகிறார்...




கல்லூரி முதல்வர் அவர்கள் உரையாற்றுகிறார்...




இளம் வயதிலேயே ஒரு கல்லூரியின் முதல்வராக பதவி வகிக்கும் செந்தூரன் அவர்கள் பேசியபோது... தன்னுடைய சரவெடி பேச்சால் 20 நிமிடங்கள் அரங்கையே அதிர வைத்தார்... நான் கூட எப்படி குறிப்பிட்ட நிமிடத்தில் சிறப்பாக பேச முடியுமோ என்ற தயக்கத்தில் இருந்தேன். பண்ணிரண்டு வருடங்கள் கழித்து, நாம் படித்த கல்லூரியில் ஒரு மாபெரும் அரங்கில் கற்றோர்களும், புகழ்பெற்ற மனிதர்களும், மாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்துள்ள இந்த நன்னாளில், நாம் பேசுவதன் மூலம் ஒரு பெருமைமிகு மாணவன் என்பதை நிரூபிப்பதோடு, எனக்கு கற்றுக் கொடுத்த பேராசிரியர் களுக்கு பெருமை தேடித்தர வேண்டுமே என்ற ஒரு ஆதங்கம் இருந்தது. செந்தூரன் அவர்கள் உரையாற்றும்போது என்னுடைய நரம்புகள் முறுக்கேறியது. ஒரு வைராக்கியமே உருவாகியது. நான் பேச வருவதற்கு முன், அவரிடம் கைகுலுக்கி அற்புதமாக பேசினீர்கள். எனக்கு உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று சொல்லிவிட்டு, மேடை ஏறி மாபெரும் அரங்கில் பேச ஆரம்பித்தேன். உணர்ச்சி மிகுதியால் ஒரு நேரத்தில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதனால் எட்டு நிமிடங்களில் உரையை முடித்தேன்...





முன்னாள் மாணவர்களில் சார்பில் நான் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்... எட்டு நிமிடங்கள் பேசினேன். கனவு காணுங்கள் இளைஞர்களே..! வலிமை படைத்த பாரதத்தை உருவாக்குவோம் என்று இறுதியாக பேசி முடித்தேன். விழா முடிந்து பேசி கீழே இறங்கி இருக்கையில் அமர்ந்தபோது, பேராசிரியர்.அருணேஷ் அவர்கள், படிக்கும்போது எப்படி இருந்த செந்தில்குமாரு, அப்படியே தலைகீழா மாறிட்டதை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குது என்றார். நான் சொன்னேன், நீங்க என்கூட அடிக்கடி அலைபேசியில் அழைத்துப் பேசி நிறைய விசயங்களை பாரட்டுன தாளதான், என்னால தைரியமா வந்து இந்த விழாவுல கலந்துக்க முடிஞ்சது... இல்லேன்னா நான் வந்துருப்பேனானு தெரியல. நம்ம துறையைப் பத்தி வலைப்பூ உருவாக்குறதுக்கு தூண்டுகோலா நீங்கதான் இருந்தேங்க. அந்த வகையில நம்ம கல்லூரியோட வலைப்பூ உருவாக்கத்தோட மூலகர்த்தாவே நீங்கதான். இல்லாட்டி எனக்கு அவ்வளவா ஆர்வம் வந்துருக்காது. சில சமயங்கள்ல சில பேரு என்கிட்ட பேசும்போது, என்னோட குறையை மட்டுமே பெருசா பேசுனதுல, நீங்க மட்டும்தான் என்னோட நிறைகளை கண்டுபிடிச்சி வெகுவா பாராட்டுனீங்க. அதனாலதான் நானு மிடுக்கா இந்தக் கல்லூரி விழாவுல பேசுனேன் சாருன்னு சொன்னேன்...

இந்த சில்வர் ஜுபிலி விழா நிகழ்வு முழுமையும் முகநூலில் லைவ் டெலிகாஸ்ட் ஆனதாகவும், என்னுடன் படித்த சென்னையில் பணிபுரியும் நண்பர்கள் என்னுடைய மலரும் நினைவுகள் பேச்சைக் கேட்டுவிட்டு பாராட்டு தெரிவித்தார்கள்... என்னுடைய நண்பர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்!





கணிப்பொறித்துறையின் முன்னாள் மாணவர் J.செந்தில்குமார் (2002-2005), நான்கு நிமிடங்கள் ஆங்கில மொழியில் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்...


முன்னாள் மாணவர் சுரேஷ்குமார் அவர்கள் (1988-1991) தன்னுடைய கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தற்போது சென்னை மாநகரில் TCS நிறுவனத்தில் பணிபுரிகிறார்... இந்த விழா முடிந்தபிறகு நான், Dr.பாலமுருகன் அவர்கள், 1988-1991 ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, அவர்களுடைய நான்கு சக்கர வாகனத்தில் அளவளாவி பேசிக்கொண்டே, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சென்றோம். இறைவனை வழிபட்டோம்...பின்னர் அனைவரும் என்னுடைய கிராமத்திலுள்ள என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். என்னுடைய தாயாருடன் பேசிவிட்டு அனைவரும் மகிழ்ச்சியோடு சென்றனர்...


கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில்...






1988 ஆண்டு கணிப்பொறித்துறை ஆரம்பிக்கப்பட்டபோது படித்த மாணவர்கள். அப்போது கணிதத்துறை ஆசிரியர்கள்தான் கணிப்பொறி பாடம் எடுத்துள்ளார்கள். கணிதத் துறை பேராசிரியர் ராஜாராம் அவர்களை சந்தித்து முன்னாள் மாணவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது...



கணிப்பொறித்துறை ஆய்வுக் கூடத்தில் பேராசிரியர்களுடன்...




விலங்கியல் துறை பேராசிரியர்.ராஜகுரு அவர்கள்...

No comments:

Post a Comment