என்னைப் பற்றி

இந்த பூமியில் உயிர் வாழும் வரைக்கும் சமூக மாற்றத்தை நோக்கியே நீண்ட பயணம் செய்ய வேண்டும் என்ற இலக்கோடு வாழ்பவன். கல்லூரி படிப்பு படித்தது கணிப்பொறித்துறை என்றாலும், இலக்கியம், வரலாற்று ஆய்வு, சமூக மானிட இயல், உலக சினிமா, அரசியல் களம், எழுத்துலகம் என்று பல்வேறு தளங்களில் இயங்குகிறேன். கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியைத் தொடங்கி, இலக்கியவாதியாக, சமூக ஆர்வலராக, மேடைப் பேச்சுக்களில் நட்சத்திர பேச்சாளராக முத்திரை பதிக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணம் செய்கிறேன். கடந்து ஐந்து வருடங்களாக வலைப்பூவில் எழுதத் தொடங்கி இலக்கற்ற பயணியாக எழுத்துலகில் பயணம் செய்கிறேன்...


1982 ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் பிறந்தேன். எனது உயிரினும் மேலாக நான் பிறந்த மண்ணை நேசிக்கிறேன். கிராமத்து மக்களின் வாழ்க்கையோடும், வாழ்வியலை சித்தரிக்கும் எழுத்துக்களோடும் பயணம் செய்கிறேன். கிராமத்திற்கு 2014 ம் ஆண்டு (09.06.2014) திருநெல்வேலி மாவட்டத்தின் "மத நல்லிணக்க விருது" கிடைத்தது. இத்தகைய உயர்ந்த விருதைப் பெற்றதால் கிராமத்தின் பெருமையும் உயர்ந்தது! 

எனது அன்புக்குரிய தாயார் மல்லிகா, காலம் சென்ற எனது தந்தையார் 

ரா ராமகிருஷ்ணன், நினைவு தெரிந்த நாள் முதலாக நான் போற்றி வணங்கும் எனது குருநாதர் சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கும், இந்த வலைப்பூவை சமர்ப்பணம்!

நான் பிறந்த தமிழக மண்ணிற்கும், ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியத் திருநாட்டிற்கும் அர்பணிப்பு உணர்வோடு, எண்ணற்ற நற்காரியங்களை ஆற்ற வேண்டும் என்ற வேட்கையோடு வாழ்வில் பயணம் செய்கிறேன்! 

No comments:

Post a Comment